முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடைத்தாள்களை உறையில் வைத்து சீலிடும் வரை தேர்வர்கள் அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை என தேர்வு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை ஆசிரியர் பணிக்கான நியமனத்
தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (ஜன. 10) நடைபெற உள்ளது. தேர்வு
மையங்களுக்கு செல்வத ற்கு ஏதுவாக அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட
உள்ளன. தேர்வர்கள் சரியாக காலை 9 மணிக்கு தேர்வு மையங்களில் இருக்க
வேண்டும். தேர்வறைக்குள் 9.30 மணிக்கு அனுமதிக்கப்படுவர். 10.10 மணிக்கு
மேல் வருபவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனு மதியில்லை.
தேர்வறைக்குள் செல்போன், மடிக்கணினி, புளுடூத் கருவிகள், கால்குலேட்டர்
உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு சென்றால் தேர்வறை யை விட்டு
வெளியேற்றப்படுவர். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை 3
ஆண்டு எழுத தடை விதிக்கப்படும்.
தேர்வறையில் சரியாக 9.40 மணிக்கு விடைத் தாள் வழங்கப்படும். விடைத் தாளில்
பெயர், பதிவெண், போட்டோ சரிபார்த்து எழுத வேண்டும். பகல் 1 மணிக்கு தேர்வு
முடிந்ததும் அனைத்து தேர்வர் களிடமிருந்தும் விடைத்தாள் சேகரிக்கப்படும்.
தேர்வர்கள் முன்னிலையி லேயே விடைத்தாள் உறையில் வைத்து சீலிடப்படும். அதன்
பின்பே தேர்வர்கள் அறையை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப் படுவர்.
தேர்விற்கான ஹால்டிக்கெட் டுகளை <www.trb.tn.nic.in>
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இணையதளத்தில் ஹால்
டிக்கெட் கிடைக்காதவர்களும் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இன்றி
பதிவிறக்கம் செய்தவர் களும் 4 புகைப்படத்துடன் இன்று முதன்மைக்கல்வி
அலுவலகத்தில் சான்றொப்பம் பெற்றுக்கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
PG~TRB இன்று எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள் ....
ReplyDeleteதோழி . தர்ஷினி ஹாரத்தி அவர்களுக்கு எனது "இரட்டிப்பு வாழ்த்துகள்"....