முழுவதும் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் காலி யாக உள்ள 1807 முதுநிலை
ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அனைத்து மாவட்டங்களி லும்
நடந்தது. முதல் முறை யாக போட்டித் தேர்வு விடைத்தாளில் தேர்வு
எழுதுபவர்களின் புகைப்படம் இடம் பெற்றது.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் & 277, ஆங் கிலம்
& 209, கணிதம் & 222, இயற்பியல் & 189, வேதியியல் & 189,
தாவரவியல் & 95, விலங்கியல் & 89, வரலாறு & 198, பொருளியல்
& 177, வணிகவியல் & 135, உடற்கல்வி இயக்குநர் நிலை 1 & 27 ஆக
மொத்தம் 1,807 காலியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
நிரப்பப்படுகிறது.
இதற்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று
நடந்தது. காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடந்தது. போட்டித் தேர்வில்
முதல் முறையாக தேர்வு எழுதுபவரின் புகைப்படம் விடைத்தாளில் இடம்
பெற்றிருந்தது. தேர்வு எழுது பவர்களின் பெயர், பதிவு எண் ஆகியவையும்
விடைத்தாளில் இடம் பெற்றிருந் தது.
போட்டித் தேர்வுகளை பொறுத்தவரை பெயர், பதிவு எண் ஆகியவற்றை எழுதி வட்டமிட
வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் முது நிலை ஆசிரியர் தேர்வில்
பதிவு எண் மட்டும் எழுதி கையெழுத்திட்டால் போதும் என்ற வகையில் மிகவும்
எளிதாக விடைத் தாள் விநியோகிக்கப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் சில
சமயங்களில் தவறாகவோ எண் களையோ, வார்த்தைகளையோ வட்டமிட்டு விட்டால் அவர்களது
விடைத்தாள்களை மதிப் பீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க
இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர். தேர்வு
மையங்களுக்குள் கால்குலேட்டர், செல்போன் உள் ளிட்ட மின்னணு சாதனங்கள்
எதுவும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பள்ளிக் கல்வி இணை
இயக்குநர்கள் அனுப்பப்பட்டு தேர்வை கண்காணித்தனர். நெல்லை மாவட்டத்தில்
பாளை. சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி,
சாப்டர் மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 22 மையங்களில்
தேர்வு நடந்தது. 7 ஆயிரத்து 754 பேருக்கு தேர்வு எழுதுவதற்கான அழைப்புக்
கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 508 பேர் தேர்வு எழுதவில்லை. 7 ஆயிரத்து 246
பேர் தேர்வு எழுதினர்.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட முதன் மைக் கல்வி
அலுவலர் கஸ்தூரி பாய், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட
கல்வி அலுவலர்கள் நெல்லை டோரா, சேரன்மகாதேவி ஜேக்கப், தென்காசி பாலசிங்,
மெட்ரிகுலேஷன் பள்ளிகள�ன் ஆய்வாளர் பாலா மற்றும் கல்வித் துறையினர் தேர்வு
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விடை அளிக்காத காரணம் என்ன?
முதுநிலை ஆசிரியர் தேர்வில் தவறான வினாக்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் முறை
கிடையாது. எனவே தேர்வர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்குமாறு
கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். 150 கேள்விகளுக்கும் விடை
அளிக்காதவர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்க தனி படிவம் ஆசிரியர் தேர்வு
வாரியம் சார்பில் அனைத்து தேர்வு அரங்குகளுக�கும் விநியோகம்
செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதை யாரும் பயன்படுத்தவில்லை என கல்வித் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...