புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை 5638 பேர் எழுதுகிறார்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தகவல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற
10ந்தேதி(சனிக்கிழமை) அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை 13 மையங்களில் 5638 பேர்
எழுதுகிறார்கள். என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர்
நா.அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு
வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி
எழுத்துத்தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில்
வருகிற10ந்தேதி(சனிக்கிழமை)அன்று 13 மையங்களில் பாட வாரியாக நடைபெற
இருக்கிறது. அதன்படி தமிழ் பாடத்திற்கு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள்
அரசு மேல்நிலைப்பள்ளியில் 460 பேரும், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி
மேல்நிலைப்பள்ளியில் 142 பேரும், அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்
460 பேரும் எழுதுகிறார்கள். ஆங்கில பாடத்திற்கு புதுக்கோட்டை திருஇருதய
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 460 பேரும், கைக்குறிச்சி ஏடிஆர் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் 156 பேரும் தேர்வினை எழுதுகிறார்கள். பொருளியல்
பாடத்திற்கு புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 364 பேரும்,
விலங்கியல் பாடத்திற்கு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 333
பேரும், கணித பாடத்திற்கு புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில்
340 பேரும், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 460
பேரும், தாவரவியல் பாடத்திற்கு புதுக்கோட்டை டிஇஎல்சி மேல்நிலைப்பள்ளியில்
321 பேரும், இயற்பியல் பாடத்திற்கு வல்லத்திராக்கோட்டை இராமசாமி
தெய்வானையம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 436 பேரும், வேதியியல்
பாடத்திற்கு ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 440 பேரும், வரலாறு
பாடத்திற்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 282 பேரும்,
புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 460 பேரும்
தேர்வினை எழுதுகிறார்கள். உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாடத்திற்கு ஆலங்குடி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 120 பேரும், வணிகவியல் பாடத்திற்கு
கைக்குறிச்சி ஏடிஆர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 404 பேரும்,ஆக மொத்தம்
5638 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டித்தேர்வினை எழுதுகிறார்கள். தேர்வர்கள் கால்குலேட்டர், பேஜர்,
செல்போன், மின்னணுகைக்கடிகாரங்கள், வேறு மின்னணு சாதனங்கள், ஆகியவற்றை
தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட
தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும். வினாத்தாளில் எந்த
குறீயீட்டினையும் இடக்கூடாது. போட்டித்தேர்வு விதிமுறைகளை மீறும்
தேர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 3 ஆண்டுகளுக்கு
போட்டித்தேர்வு எழுத தடைவிதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு
வாரிய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படத்துடன்
கூடிய நுழைவுச்சீட்டினைக் கொண்டு வரவேண்டும்.தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில்
புகைப்படம் இல்லாதவர்கள் வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி சான்றிதழில்
பதிவு பெற்ற அரசு அதிகாரியின் மேலொப்பம் பெற்று தேர்வுக்கு வரவேண்டும்.
இது குறித்து மேலும் விபரங்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தினை தொடர்பு
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளும்
சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...