வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும்
நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான நுகர்வோர்கள் இத்திட்டத்தில்
சேருவதற்கு ஆர்வம் காட்டாததால், எளிய நடைமுறையை பின்பற்றுவதற்காக
வீடுகளுக்கு சிலிண்டர் கொண்டு செல்லும் டெலிவரி ஆட்களிடமே வங்கிக்கு அளிக்க
வேண்டிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று இந்தியன் ஆயில்
கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1.53 கோடி
சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி, 53 லட்சம் பேர் நேரடி
மானியம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள். இது தவிர தமிழகத்தில் 15 சதவீதம்
பேரின் விண்ணப்பங்கள் மானியம் பெறுவதற்கு, வங்கி கணக்குடன் இணைக்கும்
பணிகள் நடைபெற்று வருவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான நுகர்வோர்கள் இத்திட்டத்தில்
சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர்களும் நேரடி மானிய திட்டத்தில்
சேர பல எளிய வழிகளை கையாண்டு வருவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மக்கள் தொடர்பு பொதுமேலாளர்
வெற்றி செல்வக்குமார் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை அரியலூர், மதுரை,
திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சமையல்
எரிவாயு நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். சென்னையில் சுமார் 12
லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நேரடி மானியத்திட்டத்தில்
சேர்ந்தவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். எண்ணெய்
நிறுவனங்களும், டிவி விளம்பரங்கள், முகாம்கள், எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் என
பலவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் சென்னையில் உள்ள நுகர்வோர்கள்
இத்திட்டத்தில் சேர ஆர்வம் காட்டவில்லை. இதனால் எளிய நடைமுறையை
பின்பற்றுவதற்காக, தற்போது வீடுகளுக்கு சிலிண்டர் கொண்டு செல்லும்
பணியாட்களிடமே வங்கிக்கு அளிக்க வேண்டிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
அளிக்கலாம் என அறிமுகப்படுத்தி உள்ளோம். இது ஓரளவுக்கு நுகர்வோர்கள்
மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
மத்திய் அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு நன்கு செய்ல்படுத்திவருகிறது. எரிவாயுதிட்டத்திற்கு உள்ளூரில் வேலையில்லா பட்டதாரிகளை கண்டறிந்து எரிவாயு நுகர்வோர்களின் வீட்டிற்கே சென்று ,ஒரு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெற ரூ 2.00 என நிர்ணயித்து ஒவ்வொரு நகராட்சி வார்டுகளுக்கும், ஊராட்சி ,பேரூராட்சிகளும் மக்கள்தொகைக்கேற்ப நபர்களை எரிவாயு விநியோகிஸ்தர் தன் செலவில் நிதிகொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தினால் சீக்கிரமாகவே இந்த செய்ல் நிறைவடையும். அப்படியில்லைஎனில் மான்யம் பெற விண்ணப்பிற்காத சிலிண்டருக்கு எரிவாயு டீலர்களுக்கு கமிஷ்ன் கட் செய்ய வேண்டும். ஆனால் நுகர்வோருக்கு சிலிண்டர் எந்த காரணத்தைக்கொண்டும் நிறுத்தக்கூடாது. இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மக்கள் தொடர்பு பொதுமேலாளர் வெற்றி செல்வக்குமார்ருக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளது.
ReplyDeleteGood decsion
ReplyDelete