Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் பணி ஒதுக்கீடு தராமல் டி.என்.பி.எஸ்.சி நிராகரிப்பு

• ஒரு விண்ணப்பதாரர் மூன்று முறை இலவசமாக தேர்வு எழுதி இருக்கிறார் என்ற தரவு தளத்தை உருவாக்கி விண்ணப்பம் செய்யும்பொழுதே நிராகரிக்க முடியாதா ?
• பல லட்ச விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நுழைவுக் கூட அனுமதி சீட்டு வழங்கி பின்னர் தேர்வு செய்யும் போதும் தேர்வரின் தகவல்களை ஆராயாமல் தான் தெரிவுப் பட்டியலை வெளியிடுகிரார்களா டி.என்.பி.எஸ்.சி ?
• தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரை எண் 12 ல் குறிப்பிட்டபடி “ஏற்கனவே பெற்ற கட்டணச் சலுகையை மறைத்து பொய்யாகக் கட்டணச் சலுகை கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்வதிலிருந்து தள்ளிவைக்கப்படுவார்கள்” என்று கூறிவிட்டு ஏன் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் தெரிவு செய்த நபரை அழைத்துவிட்டு டாட்டா காட்ட வேண்டும் ? அதுவரை உறக்கமோ என்னமோ தெரியவில்லை 
• இது வரை பல தேர்வுகளில் தேர்வு கட்டணம் செலுத்தாமலேயே பல பேருக்கு நுழைவு கூட சீட்டு அனுமதித்த போது எந்த விதிகளின் பேரில் வெளியிட்டார்கள் ?
• ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ இதை செய்திருக்கலாம்..ஏன் இணைய மையங்களில் விஷயம் தெரியாத ஒரு நபர் கூட தவறாக குறிப்பிட்டிருக்கலாம். தெளிவுரைகள் தெளிவாக இல்லாமல் இருக்கும் போது இது போன்ற மழைக்கு பின் தோன்றும் “காளான்” விதிகளை கொண்டு வருவது நியாயமா ?
• இன்று விண்ணப்ப கட்டணம் செலுத்தவில்லை என்று நிராகரிக்கும் இவர்கள் நாளை தேர்வு முடிவுகளை இரண்டாண்டு கழித்து வெளியிட்டு விண்ணப்ப புகைப்படத்தில் இருக்கும் நபர் நீங்களே அல்ல என்று சொல்லி கூட நிராகரிக்கலாம் 
• மேலும் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் தயவு செய்து விண்ணப்பிக்கும்போது தவறான தகவல்களையோ தரவோ ,அலட்சியமாகவோ இருக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் அரசுப் பணி கனவே விண்ணப்பத்தில் இருந்து தான் தொடங்குகிறது..முதல் கோணல் முற்றிலும் கோணல் 
• இறுதி கேள்வி ? இந்த நூறு கொருவாயில் தான் டி.என்.பி.எஸ்.சி இயங்குகிறதா/இழப்பா ? கடவுளே... மனிதாபிமான அடிப்படையில் ஒரு பகிரங்க எச்சரிக்கையோ/அபராதமோ விதித்திருக்கலாம்.. 
• நீதிமன்றம் சொல்லட்டும்....




2 Comments:

  1. பட்டதாரி களுக்கு வயது வரம்பில் லை என்ற விதி உள்ளது.
    கடந்த VAO தேர்வின் போது
    இத்தேர்விற்கு அந்த விதி பொருந்தாது என ஆரம்ப த்திலேயே கூறாமல் விண்ணப்பங்களை அனுமதித்து ஒப்புதல் கொடுத்து பலமாதம் கடந்து தேர்வுக்கு தயாராகிய பின்
    ஹால் டிக்கெட் வெளியான பின் னர்
    தான்
    வராத காரணம் கேட்ட பிறகு தான்
    இந்த தகவல் தருகிறார் கள்.
    இதை ஆரம்ப த்திலேயே தடுக்க முடியாதா ?

    ReplyDelete
  2. அனைத்து கிறிஸ்தவ ர் களும் BC பட்டியலில் தான் உள்ள னர்.
    TNPSC ஆன்லைன் முறையில் MBC இனத் தை சார்ந்த ஒரு கிறிஸ்தவ ர் எண்டர் செய்யும் போது
    MBC என்று தான் வருகிறது !
    இவர் தேர்வாகும் பட்சத்தில் பின்னர் பிரச்சனை வராதா ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive