பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு
ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி
பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு
ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20
வாரங்களாவது மாணவர்கள் மத்தியில் வகுப்பறையில் பாடம் எடுக்கவேண்டும் என்று,
மத்திய பள்ளிகல்வித்துறை செயலாளர் விர்ந்தா சாரப் தெரிவித்தார். அஞ்சல்
வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது என்று நேற்று புதுடில்லியில்
நடைபெற்ற மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் விர்ந்தா
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...