பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில்
அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
சென்னை
மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்
2 படித்து, பொதுத்தேர்வில் மாநகராட்சி அளவில் முதல் 3 இடங்களைப்
பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு
வழங்கப்படுகிறது.
இந்தப்
பரிசுகள் ரூ. 5,000, ரூ. 3,500, ரூ. 3,000 என்ற அளவில் இருந்தது.
இந்த பரிசுத் தொகை இப்போது
ரூ. 10 ஆயிரம், ரூ. 9 ஆயிரம்,
ரூ. 8 ஆயிரம் என உயர்த்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...