ஹீலர் பாஸ்கரின் ஒருநாள் கருத்ததரங்கம் சுருக்கமாக
நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று,
ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள
பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக
வாழலாம்.
உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]
பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. [ வாயு
தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த
அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி
இல்லாதபோது சாப்பிடுவது தான் ] அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால்
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்
நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும்.
சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.
உணவில் ஆறு சுவைகள் [ இனிப்பு, கசப்பு,
துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் ] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள்.
ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க
வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக
ஜீரணிக்க முடியும்.
சாப்பிடும்பொழுது கண்களை மூடி, உதட்டை மூடி,
உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும்.
ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி. முடிந்தவரை சாப்பிடுவதற்கு
அரைமணிநேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை
ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம்
ஜீரணத்திற்கு எதிரி .
குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகு மட்டுமே
சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது.
அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை
வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ,
டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது [ கவனம் சிதறாமல் இருப்பதற்காக
]கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் ஏப்பம் வந்த உடனோ
அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு
வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட
வேண்டிய அளவு.
நீர் [நீர்] [ சிறுநீரகம், சிறுநீர்ப்பை,
விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக
இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] தண்ணீரைக் கொதிக்க வைத்தோ
அல்லது நீரை வடிகட்டியோ குடிபதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க
நேரிடும். அந்த தாது உப்புக்களுகாக தான் நாம் நீரையே அருந்துகிறோம்.
அதற்க்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம்.
பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும்.
மினரல் வாட்டர் / Package Drinking Water /
Cane Water பயன்படுத்தக் கூடாது. அப்படி குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக
நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது
மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [ பிரெஷ்
ஜூஸ் ] போன்றவற்றை பருகலாம்.
தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது.
சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நீரை
அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் தேவைக்கு அதிகமாகவே
குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்து சப்பி குடிக்க வேண்டும்.
நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் /
பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு,
கரும்புச்சாறு,… ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை
தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால்
முழுமையாக ஜீரணிக்க முடியும்.
பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில்
ஜீரணமாகும். நன்றாக பாசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி
எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும்.
நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள்
போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில்
வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள்
ஏற்படும்.
ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [ கல்லீரல்,
பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை
பின்பற்றவும்] முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11
மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள
இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.
வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும்.
தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள்,
செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு
சென்றால் தூக்கம் நன்றாக வரும். புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை
குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம்
தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு
விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை
நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு
நல்லது.
படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற
கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது
தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக்
கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். உடல்
உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே
வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத்
தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும்.
ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். தாடைக்குக் கீழ் தடவிக்
கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். தலையில் உச்சிக்கும் சுழிக்கும்
நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம்
இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால்
அவதிப்படும் சுழல் உருவாகும். இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால்
தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும்
ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற
இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம்
கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger)
நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு
மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில்
இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட
வேண்டாம்.
காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய
உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]
புகைபழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை
பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும்
கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். கொசுவர்த்தி சுருள் மற்றும்
கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள்
முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [ நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல்
இருக்க ] வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும்
காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.
தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும்
ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு -
Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ]
தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு
தூங்க கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide)
மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] மரங்கள் தான் காற்றை
உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு
ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை
இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாடிக்கொள்ளுங்கள்.
சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில்
உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி
முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில
மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல்,
மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா…
போன்ற பல வியாதிகள் உண்டாகும். சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை
வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று
ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை
உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல்
நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற
உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில்
புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.
உழைப்பு [நெருப்பு] [ இருதயம், சிறுகுடல்,
இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே
கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும்.
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும்
வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல்
உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம்
நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம்.
தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது
விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.
காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில்
தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின்
மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி
அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது
அளிக்கப்படும். காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம்
உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை
அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.
எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து
பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம்
உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை
அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம்
தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த
வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை.
the message about our body organisation by healer basker is very nice..my family is following this and it is giving good results .so please believe ans follow,also introduce this to your friends..
ReplyDelete