தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும்
வகையில், காணொலிக் காட்சி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் வகுப்புகள்
நடத்தும் புதிய திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிமுகம்
செய்துள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் பிரவீண் குமார் கூறியது: தமிழகம்
முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலிக் காட்சி முறையில்
வகுப்புகள் நடத்தும் திட்டம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம் நடைபெறும். ஜனவரி 21-ஆம் தேதி முதல் இந்த
வகுப்புகள் தொடங்கும்.
காணொலிக் காட்சி தொழில்நுட்ப வசதி கொண்ட அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும்
இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இதற்கு கட்டணம் எதுவும்
கிடையாது. எந்தெந்த வகுப்புகள் எந்தெந்த தேதியில் நடத்தப்படுகின்றன,
நடத்தும் கல்லூரி எது என்பன உள்ளிட்ட விவரங்கள் இயக்குநர் அலுவலக
இணையதளத்தில் வெளியிடப்படும்.
கல்லூரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் இணைப்பு முகவரியை (லாகின்) பயன்படுத்தி இந்த வகுப்புகளைக் காண முடியும்.
இந்த மின்னஞ்சல் இணைப்பு முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை இதுவரை பெறாத
கல்லூரிகள் padmakumamest@gmail.com, ckarthikachandra@gmail.com ஆகிய
மின்னஞ்சல் முகவரிகளுக்கு தங்களுடைய விவரங்களைச் சமர்ப்பித்து பெற்றுக்
கொள்ளலாம் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...