Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத போகும் நண்பர்களே... இதை படிங்க முதலில்...

1. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனே உங்கள் ஹால் டிக்கெட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
இது கடைசி நேர பரபரப்பு மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
2. தேர்வுக்கு நீல நிற அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. தேர்வுக்கு செல்லும் போது இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ எடுத்து செல்லுங்கள்.

4. தேர்வு வினாத்தாளில் எதுவும் குறியிட கூடாது.
5. வினாத்தாள் பெற்ற முதல் ஒரு மணி நேரத்தில் வினாத்தாள் படிப்பது மற்றும் 25 % மதிப்பெண்ணுக்கான விடைகளை முடித்துவிட வேண்டும்.
6. அடுத்த ஒரு மணி நேரத்தில் 50% விடைகளை முடித்து விட்டு, மீதமுள்ள ஒரு மணி நேரத்தில் கடினமான மற்றும் குழப்பமான வினாக்களை யோசித்து உரிய விடைகளை அளிப்பதற்கு செலவிட வேண்டும்.
7. இந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வெளிப்படையாக நடக்கும் தேர்வு. இதில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். 
8. இந்த முறை ஓஎம்ஆர் தாளில் உங்கள் புகைப்படம் மற்றும் ரிஜிஸ்டர் எண்ணும் பதிவிடப்பட்டு உள்ளது. இது குழப்பத்தை தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்து வரும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒர் சிறிய உதாரணமாக கூறலாம்.
9. தேர்வுக்கு செல்லும் போது ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்ல மறந்துவிடாதீர்கள்.
10. செல்போன் கொண்டு செல்வதை தவிருங்கள். SOURCE : TNTET & PGTRB




3 Comments:

  1. வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது
    வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த விதி அரசியலைமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
    இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
    விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்பு பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை செய்கிறது. எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    ReplyDelete
  2. என் இனிய நண்பர்களே.

    உச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை TET நடக்க வாய்ப்பு இல்லை.
    Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும்.
    தற்போதைய நிலைப்படி 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி( மதுரை தீர்ப்பு)

    இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.

    ஏற்கனவே பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றாலே இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதான் பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை என கருதுகிறேன்.
    எதுவாக இருந்தாலும் நல்லது நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே.

    ReplyDelete
  3. Sir pg trb la handicapped person kku 3hrs than a.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive