தபால்துறை சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள
1,179 அஞ்சலக உதவியாளர் (போஸ்டல் அசிஸ்டென்ட்) பணியிடங்களுக்கு, முதல்கட்ட
தேர்வுகள், கடந்தாண்டு மே 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில், 85
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களில், 3
ஆயிரத்து 700 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்தாண்டு செப்., மாதம் இரண்டாம்
கட்ட தேர்வாக, கம்ப்யூட்டர் திறன் தேர்வு(தட்டச்சு) நடத்தப்பட்டது. தேர்வு
நடத்தப்பட்டு, பல மாதங்களான நிலையில், தமிழகத்தில் மட்டும் தேர்வு முடிவு
வெளியிடப்படவில்லை.
பிற மாநிலங்களில், இதே பதவிக்கு நடந்த தேர்வில்
பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சியில் உள்ளனர். இறுதி முடிவு
அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், வேறு பணிக்கும் செல்ல முடியாமல் தேர்வு
எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இறுதி தேர்வு எழுதி காத்திருப்போர்,
தமிழகத்திற்கு பிறகு மற்ற மாநிலங்களில் தேர்வு நடத்தி, முடிவுகள்
வெளியிடப்பட்டு தேர்வு பெற்றவர்கள் வேலைக்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.
ஆனால், தமிழகத்தில் தேர்வு முடிவுகள்
வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, டில்லி அஞ்சல்துறை அதிகாரிகளிடம்
கேட்டால், "தேர்வு முடிவுகளை, சென்னை அஞ்சல் துறைக்கு அனுப்பி ஒரு மாதம்
ஆகிவிட்டது என்று தெரிவிக்கின்றனர். சென்னை அதிகாரிகள், தேர்வு முடிவுகளை
உடனடியாக வெளியிட வேண்டும்" என்றனர்.
மண்டல தபால் துறை உயர் அதிகாரிகளிடம்
கேட்டபோது, "இத்துறையில் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பு,
தனியார் ஏஜன்சியிடம் வழங்கப்பட்டது. அவர்கள் தேர்வு முடிவை சென்னை தலைமை
அலுவலகத்தில் கொடுத்து விடுவர். தலைமை அலுவலகம்தான், தேர்வு முடிவுகளை
அறிவிக்க வேண்டும்" என்றனர்.
eppodthu result vandhavudan website il sollunga please
ReplyDelete