Home »
» மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட
பொதுக்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி.,
மேல் நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகமுத்து
வரவேற்றார். மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார்.
திண்டிவனம் கல்வி
மாவட்ட தலைவர் ஜீவேந்திரன், மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர்
சாம்பமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், மாநில
பிரசார செயலாளர் சுப்ரமணி சிறப்புரையாற்றினர். கோர்ட் உத்தரவுப்படி,
எம்.பில்., முடித்தவர்களுக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
கடந்த 2004ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பணி வரன்முறை செய்திட
வேண்டும் மற்றும் 50 சதவீதம் அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து
வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூன்றாவது ஊக்க ஊதியம் என்பது வருமானம் ஊதியம் என்பதை தாண்டி ஆசிரியர்களின் தன் மானம் சம்பந்தம் மானது தனக்கு கீழாக அல்லது தனக்கு பிறகு வேளையில் சேர்ந்தவர்கள் அதிக ஊதியமும் , மூதோர் பெரும் ஊதியம் குறைவாகவும் உள்ளது , 6 வது ஊதிய குழு வில் ஏற்பட்ட முரண் பாடு ? எனவே கண்டிப்பாக சென்னை , மதுரை உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும்
ReplyDelete