கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்
தலைவர் ஜி.கே. வாசன்
கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய
அரசுக்கு இணையான ஊதியம், தர
ஊதியம் ரூபாய் 4,200 வழங்க வேண்டியும், பழைய
ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு, பதவி உயர்வு, பள்ளிகளின்
தரம் உயர்த்துதல், காலியான பணியிடங்களை நிரப்புதல்
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆசிரியர் கூட்டணி போராடி வருகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து
வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு,
மத்திய அரசு ஆரம்பப் பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க
வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,
அரசை அணுகி, அதன்பின் உயர்
நீதிமன்றத்தையும் அணுகினார்கள். உயர் நீதிமன்றம் "மனுதாரர்களின்
- ஆசிரியர்களின் - கோரிக்கையை பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் தக்க பதில் தர
வேண்டும்" - என்று தமிழக அரசை
அறிவுறுத்தியது.
அதனை பரிசீலித்த தமிழக அரசு நகரங்களில்
பணிபுரியும் மத்திய அரசுப் பள்ளி
ஆசிரியர் ஊதியத்திற்கு இணையாக, கிராமங்களில் பணிபுரியும்
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்க இயலாது; காரணம்
கிராமங்களில் செலவு குறைவு, இரண்டாவது
இக்கோரிக்கையை ஏற்றால் அரசுக்கு கூடுதல்
செலவு ஏற்படும். அதனை ஏற்கும் நிலையில்
தமிழக அரசின் நிதிநிலை இல்லை"
- என்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில்,
ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்நிலையில்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டமைப்பும் இணைந்து தங்கள் கோரிக்கையை
வலியுறுத்தி போராட்டம் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இச்சூழலில்
நகரங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை விட, கிராமங்களில் பணிபுரியும்
ஆசிரியருக்குத் தான் முக்கியத்துவமும், கூடுதல்
ஊதியமும் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் கிராமங்களில் பணிபுரிய
தகுதியான ஆசிரியர்கள் முன் வருவார்கள்; கல்வியின்
தரமும் உயரும்; கிராமப்புற மாணவர்கள்
பயன்பெறுவார்கள்.
ஆகவே மத்திய அரசின் நகர்புற
ஆசிரியர்களின் ஊதியத்தை விடக் கூடுதலாக வழங்காவிட்டாலும்,
அவர்களுக்கு இணையான அளவிலாவது தமிழக
அரசின் கிராமப்புற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தான்
நியாயமானது.
இப்பொழுது
ஆசிரியர் சங்க அமைப்புகள் போராட்ட
நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். போராட்டம் தொடங்கப்பட்டால், பள்ளிக்கூடங்கள் மூடப்படும் அபாயமும், ஏழைக் குழந்தைகளின் கல்வியும்
பாதிக்கப்படும் சூழலும் உருவாகும். தேர்வு
காலம் என்பதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு
அவர்களது கல்வி பாதிக்காத வகையில்
தமிழக அரசு செயல்பட வேண்டும்.
ஆகவே தமிழக அரசு நேரிடையாக ஆசிரியர் சங்க அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி, பாதிக்கப்பட்ட சுமார் 25000 ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...