பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான, தேர்வு
மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறை
தேர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதனால்,
பிப்ரவரி மாதத்துக்குள் செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம்
உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி துவங்கி, பிப்ரவரி 23ம் தேதிக்குள் முடிக்கும்
வகையில், செய்முறை தேர்வு நடத்திட, ஆயத்த பணி துவங்கியுள்ளன. தேர்வு மையம்
அமைப்பது, தேர்வுக்கு ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் நியமனம், இணை மையம்
உள்ளிட்ட பணிகளில், கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்
பாட வாரியாக தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உள்ள ஆய்வக வசதி
உள்ளிட்டவை குறித்த விவரங்களையும், தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் திரட்டப்பட்டு, செய்முறை தேர்வுக்கான
மையங்கள், அதில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் உள்ளிட்டவை
நியமிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...