அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள்
வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 1 முதல்
8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செட் வண்ணச்
சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு 2 செட் சீருடைகள் வழங்க
திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு அரசின் கதர், கைத்தறித்துறை சார்பில்
இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...