கரூர்
பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் வந்த பள்ளி செல்லும் மாணவன் ஒருவன்,
போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விழுந்தது பொதுமக்களிடையே பரபரப்பையும்,
கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த
ஆட்டோ டிரைவரின் மகன் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில்
படித்து வருகிறான். 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், அதே பள்ளியில்
11ம் வகுப்பு படிக்கும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளான்.
நண்பர்கள் இருவரும் சாலையை கடந்து பேருந்து
நிலையத்திற்க்கு சென்ற நிலையில், போதை தலைக்கேறிய அந்த மாணவன் திடீரென
மயங்கி பேருந்து நிலையத்தின் அருகில் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி
அடைந்தனர். பட்டப்பகலில் பள்ளி சீருடையிலேயே மது அருந்தி மயங்கியிருந்த
மாணவனை பொதுமக்கள் மாணவனை எழுப்பினர்.
இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல்
அளித்ததால் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில்
பட்டப்பகலில் மாணவன் மது அருந்தி இருப்பது கரூர் பெற்றோர்களிடையே
மனகஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Parents and Government will reap the effect from those kind of students; They tied the hands of the teacher, and the students are exposed to all kind of bad habits through TV and social behaviours. Government and parents should take the responsibility.
ReplyDelete