பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்டம், பொறியியல்
பிரிவில் காலியாகவுள்ள 7 சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்கள் இன
சுழற்சிமுறையில் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பங்களை உரிய கல்வித் தகுதி சான்றிதழின் நகல் மற்றும் இன
சுழற்சிக்குரிய சான்றின் நகல்களுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில்
உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முகவரிக்கு ஜன. 20-ம்
பிற்பகல் 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 1.7.2014ம் தேதி 18 வயது
பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும், பொது போட்டி (பொது), ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை-
ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் - பொது,
பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) பொது,
ஆதிதிராவிடர் - பொது ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர்கள்
மற்றும்
பொது போட்டி (ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் (ஆதரவற்ற விதவை பெண்கள்) ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை
அற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Sir 2022 date la road inspector Posting y sir
ReplyDelete