விருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர்,
ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேர் படிக்கின்றனர். இங்கு 2010ல் 6, 7, 8ம்
வகுப்புக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட் டது.
ஆனால் சில மாதங்களிலேயே கட்டிடத்தில் விரிசல்
ஏற்பட்டது. கட்டிடத்தின் ஒரு பகுதி பூமிக்குள் புதைந்தது. புது கட்டிடம்
கட்டப்பட்டதில் பெருமளவு மோசடி நடந்துள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட
வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள்
எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் நேற்று விசாரித்து, பள்ளிகல்வித்துறை
செயலர், மதுரை கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணையை பிப்.2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...