கூடுவாஞ்சேரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும்
வகையில் கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், 6-ஆம் வகுப்பு முதல் பள்ளியில்
இடைநிறுத்தம் செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சிப்
பெற்ற, பெறாதவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
இதில் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
எனவே, வேலைவாய்ப்பற்றோர், இன்டிமேட் பேஷன் இந்தியா என்ற தனியார்
நிறுவனத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து
கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ்,
கல்வி தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றில் அசல், நகலுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் புகைப்படமும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...