தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல்,எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன.
தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் நல சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,'ஆசிரியர்கள் பற்றாக்குறை, குறைவாக ஒதுக்கப்படும் பாடவேளைகளால், தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக, அரசு பள்ளி மாணவர்களை உருவாக்குவது சிரமமாகிறது. வாரத்தில் இரண்டு பாடப்பிரிவு மட்டுமே தரப்படுகிறது. மாநிலம் முழுவதும், 927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தாமதமின்றி, ஓவியஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இசை பாடப்பிரிவை துவக்கி, இசை கருவிகளும் வழங்க வேண்டும்', என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...