சமையல் காஸ் சிலிண்டர், நேரடி மானியத் திட்டத்தில், இதுவரை, எட்டு
லட்சம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், 45 கோடி ரூபாய் வரவு
வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும்... தமிழகத்தில், பொதுத் துறையை
சேர்ந்த, இந்தியன் ஆயில் - 91 லட்சம்; பாரத் பெட்ரோலியம் - 39 லட்சம்;
இந்துஸ்தான் பெட்ரோலியம் - 23 லட்சம் என, மொத்தம், 1.53 கோடி, சமையல் காஸ்
சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.
மத்திய அரசு, மாற்றி அமைக்கப்பட்ட, சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய
திட்டத்தை, தமிழகம் உட்பட, நாடு முழுவதும், கடந்த 1ம் தேதி அறிமுகம்
செய்தது.இத்திட்டத்தில் இணைவதற்கு, தமிழகத்தில் உள்ள, 1,027 காஸ்
ஏஜன்சிகளில், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர், பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை, காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில், தனித்தனியே
வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கியவர்கள், சந்தை விலை கொடுத்து, காஸ் சிலிண்டர் வாங்க
வேண்டும். அதற்கான மானியத் தொகை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக
வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் இணைவதற்கு, ஜூலை வரை, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்பின், சந்தை விலையில் மட்டும், சிலிண்டர் விற்பனை செய்ய, எண்ணெய்
நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நேரடி மானியத் திட்டத்தில்
இணைய, நேற்று வரை, 86.21 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ஏற்றுக்
கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 63.26 லட்சம். எஞ்சியவர்களின்
விண்ணப்பம், காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில், பரிசீலனை செய்யப்பட்டு
வருகிறது.
கடந்த டிச., 31ம் தேதிக்கு முன் வரை, இத்திட்டத்தில் இணைந்த
வாடிக்கையாளர், வங்கிக் கணக்கில், முன்வைப்புத் தொகையாக, 568 ரூபாய், வரவு
வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வரை, 7.92 லட்சம் வாடிக்கையாளரின்
வங்கிக் கணக்கில், தலா, 568 ரூபாய் என, 45 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு
உள்ளது.
முன்வைப்பு தொகை:இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர்
கூறியதாவது:நேரடி மானியத் திட்டத்தில், இணையும் வாடிக்கையாளர் எண்ணிக்கை,
வேகமாக அதிகரித்து வருகிறது. மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு,
குறிப்பிட்ட நிதியை, வைப்புத் தொகையாக வழங்கி உள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள், தங்களின் வங்கிக் கணக்கை, பாரத ஸ்டேட் வங்கியில்
வைத்துள்ளன. இதனால், பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் வங்கிக்
கணக்கில், நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இந்த பணிகள், 'பேமண்ட்
கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற நிறுவனம் மூலம், கண்காணிக்கப்பட்டு
வருகிறது. முன்வைப்புத் தொகை, வரவு வைக்கப்பட்ட வாடிக்கையாளர், காஸ்
சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான மானியமும், வங்கி மூலம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...