'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி
விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள்,
299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன.
இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி
மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014
பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர்
என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829
ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...