தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 -
14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான
கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும்
இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித் தகவல் முறையின்
கீழ் இந்த தகவல் கிடைத்ததும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகளில், நடப்பு ஆண்டில் 6,000த்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள், தலா 35
ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஊரக
வளர்ச்சித் துறையுடன் இணைந்து. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மேற்கொண்டு
வருகிறது. அதேபோல், பயன்படுத்தப்படாத, 300 கழிப்பறைகளிலும், சிறிய அளவிலான
பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...