பெங்களூரு: போலீஸ் ஏட்டு நியமன தேர்விற்கான வினாத்தாள் வெளியானதில்,
ஒருவரிடமிருந்து மற்றவர் என, 357 பேர் பயனடைந்துள்ளனர்; தேர்வு
விதிமுறையின் படி, அவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகள் வரை, காவல் துறை
நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
போலீஸ்
ஏட்டு பதவிக்காக, உடல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து
805 பேருக்கு, கடந்த நவ., 16ம் தேதி, மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு
நடத்தப்பட்டது. அதே நாளில், கலபுரகி, பெங்களூருவில் வினாத்தாள் வெளியானது
கண்டுபிடிக்கப்பட்டது.
சி.ஐ.டி.,யிடம்...:
இது
தொடர்பாக, கலபுரகி வி.வி.காவல் நிலைய எல்லையில், ஒருவர் கைது
செய்யப்பட்டார். இவர், கொடுத்த தகவலின் பேரில், மேலும் ஒருவர் கைது
செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்த போலீசார், வினாத்தாள் வெளியான
வழக்கில், 17 பேரை கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து, 77.03 லட்சம் ரூபாயை
பறிமுதல் செய்தனர். போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம், வினாத்தாள்
வெளியானதால், எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என, விசாரணை நடத்தினர். பொதுவாக
வினாத்தாள் கசியும் விஷயத்தில், வெளிநபர்களின் கை வரிசை இருக்கும். ஆனால்,
இவ்வழக்கில், அது போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர் விசாரணையில்,
தயாரித்தவர்களே, வினாத்தாள் கசிய காரணமாக இருந்தது தெரிந்தது. கடந்த, 10ம்
தேதி, வினாத்தாள் வெளியான வழக்கு விசாரணையை, அரசு, சி.ஐ.டி.,யிடம்
ஒப்படைத்துள்ளது.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலீஸ் ஏட்டு நியமன வினாத்தாள் தயாரிக்க, கமிட்டியொன்று அமைக்கப்படும். கமிட்டியிலுள்ள, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வினாத்தாள் தயாரிப்பர். நியமனப்பிரிவு உயர் அதிகாரி ஒப்புதல் பெற்று, வினாத்தாள் முடிவு செய்யப்படும்.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலீஸ் ஏட்டு நியமன வினாத்தாள் தயாரிக்க, கமிட்டியொன்று அமைக்கப்படும். கமிட்டியிலுள்ள, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வினாத்தாள் தயாரிப்பர். நியமனப்பிரிவு உயர் அதிகாரி ஒப்புதல் பெற்று, வினாத்தாள் முடிவு செய்யப்படும்.
பாதுகாப்புடன்...:
தேர்வு நடத்தும் தினம் மற்றும் உரிய நேரத்தில் மாவட்ட மையங்களை சென்றடைய வசதியாக, அரசு அச்சகத்துக்கு அனுப்பப்படும். அங்கு தேவையான அளவு, வினாத்தாள் மட்டுமே அச்சிடப்படும். தேர்வுக்கு சில நாட்கள் இருக்கும் போது, போலீஸ் வாகனத்தில், பாதுகாப்புடன், மாவட்ட மையங்களில் உள்ள கல்வித்துறை கஜானாவுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து, தேர்வு நடக்கும் நாளன்று, காலையில், அந்தந்த தேர்வு மையத்துக்கு கொண்டு செல்லப்படும். கமிட்டியில் யார், யார் இருப்பார்கள், அவர்கள் எந்தெந்த பிரிவு அதிகாரி என்பது போன்ற விவரங்கள், ரகசியமாக வைத்து கொள்ளப்படும். வினாத்தாள் வெளியானதில், ஒருவரிடமிருந்து மற்றவர் என, 357 பேர் பயனடைந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேர்வு விதிமுறையின் படி, அடுத்த மூன்று ஆண்டுகள் வரை, அவர்கள் காவல் துறை நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் தகுதியற்றவர்களாகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆவணங்கள் பரிசீலிக்கும் பணிகள் நடக்கின்றன. இவ்வழக்கில், கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவானவர்களை தேடி வருகிறோம். மற்ற வழக்குகள் போன்று, காலாகாலத்தில் இவ்வழக்கு விசாரணையும் முடிவடையும்
பிரணவ் மொஹந்தி, சி.ஐ.டி., - ஐ.ஜி.பி.,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...