லண்டனில்
அம்பேத்கர் வசித்த வீட்டை மராட்டிய அரசு ரூ.35 கோடி ரூபாய்க்கு இன்று
விலைக்கு வாங்கியுள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14-ம் தேதி
முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது
மூன்று மாடிகளுடன் கூடிய சுமார் 2050 சதுரடி கொண்ட அந்த லண்டன் வீட்டை விலைக்கு வாங்கி, அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அதை நினைவுச்சின்னமாக பராமரிக்க வேண்டும் என மும்பை பா.ஜ.க. தலைவர் ஆஷிஷ் ஷெலார் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த வீட்டின் உரிமையாளர் இதற்கு 40 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவி ராஜ் சவான், ‘அம்பேத்கர் வாழ்ந்த இந்த லண்டன் வீட்டை இந்திய அரசு வாங்க வேண்டும் என எனது ஆட்சிக்காலத்தின் இறுதி வரை மத்திய அரசை நான் வலியுறுத்தி வந்தேன்.
இது ஒரு சர்வதேச வர்த்தகம் என்பதால் மத்திய அரசு மட்டுமே இதை வாங்க முடியும் என்ற வகையில்தான் மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். ஆனால், அதற்குப் பின்னர் என்ன நடந்தது? என்று எந்த தகவலும் எங்களுக்கு வந்து சேரவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வீட்டை 35 கோடி ரூபாய்க்கு மராட்டிய அரசு வாங்கியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் நினைவு இல்லமாக மாற்றப்படவுள்ள இந்த வீடு வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி (அம்பேத்கர் பிறந்தநாள்) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என லண்டனில் தற்போது சுற்றுப்பயணம் செய்துவரும் மராட்டிய மாநில கல்வித்துறை மந்திரி வினோத் டாவ்டே தெரிவித்துள்ளார்.
Good. But in Tamilnadu the residence of Tamilthatha VU.VE.SA. in Chennai was demolished recently.What a shame to Tamils!
ReplyDelete