கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகளாகியும், முடிவை வெளியிடாததால், அதிருப்தி அடைந்தோர், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில், காலியாக உள்ள, 3,569 கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு, 2012
நவம்பர் மாதத்தில், எழுத்துத் தேர்வு நடந்தது. இரண்டு லட்சத்திற்கும்
மேற்பட்டோர் எழுதினர்; இரண்டு மாதங்களில், 7,400 பேர் நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகளாகியும், தேர்வு
முடிவு கள் வெளியாகவில்லை. தேர்வு எழுதியோர், கோர்ட் வரை சென்று, முடிவை
வெளியிடும் உத்தரவை பெற்றனர். பல கட்ட போராட்டங்கள் நடந்த நிலையில், 'டிச.,
20ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும்' என, கூட்டுறவு சங்க பதிவாளர்
உறுதி அளித்திருந்தார்; ஆனால், முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால்,
தேர்வு எழுதி காத்திருப்போரில், 300க்கும் மேற்பட்டோர், மாநிலத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து, நேற்று காலை சென்னை வந்தனர்.
அதிகாரிகள் உறுதி:
கீழ்ப்பாக்கத்தில் உள்ள, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 'இந்த மாத இறுதிக்குள் முடிவுகள்
நிச்சயம் வெளியாகும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும், பாதி பேர்
இடத்தை காலி செய்யாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...