பொதுவான ராசி பலன்கள் என்பது அப்போதைய கிரகங்களின் நிலையை அடிப்படையாகக்
கொண்டு கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகங்களைக்
கொண்டுள்ளன.
வருட கிரகங்களான குரு, சனி மற்றும் ராகு-கேதுக்களை அடிப்படையாகக் கொண்டு வருட பலன்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. அவரவர்களின் ஜாதக கோள்களின் நிலை, தசாபுத்தி, கோசாரம் மற்றும் ஜாதக யோக அவயோகங்களுக்கு தகுந்தபடி பலன்கள் மாறுபடலாம். இங்கு கூறப்பட்டுள்ளவை ராசியை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ள பொதுவான பலன்களாகும்.
வருட கிரகங்களான குரு, சனி மற்றும் ராகு-கேதுக்களை அடிப்படையாகக் கொண்டு வருட பலன்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. அவரவர்களின் ஜாதக கோள்களின் நிலை, தசாபுத்தி, கோசாரம் மற்றும் ஜாதக யோக அவயோகங்களுக்கு தகுந்தபடி பலன்கள் மாறுபடலாம். இங்கு கூறப்பட்டுள்ளவை ராசியை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ள பொதுவான பலன்களாகும்.
2015 ஆம் ஆண்டு ராசி பலன்கள்
மேஷம்: பொதுவாக தொழில்
உத்தியோகத்தில் சிரம நிலை காணப்படும். பொருளாதார நிலையும் சுமாராக
இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
நெருங்கிய உறவினர் ஒருவரை இழக்க நேரிடலாம். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு
பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்: தொழிலில் மந்த
நிலை காணப்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பணம்
கொடுக்கல் வாங்கல் சிரம நிலையில் இருக்கும். வயிற்றில் நோய் உருவாகும்.
குழந்தைகளால் நிம்மதி குறையும். ஆன்மீகப்பயணம் உண்டாகும். பல நாட்களாக
நினைத்திருந்த ஒரு காரியம் வெற்றியடையும்.
மிதுனம்: தொழில்
உத்தியோகம் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகள்
தோன்றுவார்கள். நிலம் வீடு வாகன வகைகளில் பிரச்சினை உருவாகும். பொருளாதார
நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மிக அதிக அளவில் பணவரவு இருக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு
பொருளாதார நிலையில் கவனம் தேவை.
கடகம்: தொழில் தொடர்பாக
மனதில் குழப்பம் அதிகரிக்கும். பொருளாதாரநிலையும் மனதிற்க்கு மன மகிழ்ச்சி
தராது. அண்ணன் தம்பி உறவில் பிரச்சினை உருவாகும். குலதெய்வ வழிபாடு
சிறக்கும். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எல்லோரிடமிருந்தும்
தனிமையாக இருப்பதாக உணர்வீர்கள். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார
நிலையில் ஏற்றம் காணப்படும்.
சிம்மம்: அதிகமான செலவுகள்
மனதை அலைகழிக்கும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு செலவுகள் குறையும். எது
பேசினாலும் பிறர் தவறாக புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை
குறைவாக இருக்கும். தொழில் நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஜூலை 14ம்
தேதிக்குப் பிறகு மன பாரம் கொஞ்சம் குறையும்.
கன்னி: தொழிலில் மேன்மை
நிலை உருவாகும் புதிதாக தொழில் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக
செயல்படுத்துவீர்கள். பணவரவு அபரிமிதமாக இருக்கும். பணத்தால்
எல்லாவற்றையும் சாதிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு
உண்டாகும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
துலாம்: குடும்பத்தில்
சச்சரவுகள் அதிகரிக்கும். செலவுகளும் கைமீறும். தொழில் மந்தநிலையில்
இருக்கும். பணவரவும் திருப்தி இருக்காது. உடல் ஆரோக்கியமும்
பாதிக்கப்படும். தொழிலுக்காக அலைச்சல் அதிகரிக்கும். பாதத்தில் வலி
தோன்றும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தைத் தரும். ஜூலை 14ம் தேதிக்குப்
பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்: உடல்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் செயல் படும் வேகத்திற்க்கு உடல்
செயல்படாது. தொழில் உத்தியோகம் சுமாராக இருந்தாலும். பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். எண்ணிய யாவும் எளிதில் நிறைவேறும். குழந்தைகளால் மன
நிம்மதி குறையும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம்
தேவை.
தனுசு: பணம் கொடுக்கல்
வாங்கலில் மந்த நிலை காணப்படும். தொழில் நிமித்தமாக அதிகமான செலவுகள்
உருவாகும். எதிர்பாராத செலவுகள் மனதை அலைகழிக்கும். அலுவலகத்திலும்
வீட்டிலும் பிரச்சினைகள் உருவாகும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்: தொழிலில்
முன்னேற்றம் உண்டாகும். பணவரவு மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும்.
வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு
உண்டாகும். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு
பொருளாதார நிலையில் கவனம் தேவை.
கும்பம்: தொழில் நிலவரம்
சீராக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சச்சரவு
உண்டாகும். வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு
பொருளாதார நிலையில் மேன்மை காணப்படும்.
மீனம்: அதிகமாக செல்வம்
சேரும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். தொழில் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் சிறு சச்சரவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு
பொருளாதார நிலையில் கவனம் தேவை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...