பொறியியல் கல்லூரிகளின் அனுமதியைப் புதுப்பிப்பதற்கும், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏஐசிடிஇ அமைப்பின் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக,
நாடு முழுவதும் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் அனைத்தும்,
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கீழ் கடந்த ஆண்டு வந்தன.
அதைத்தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி
வெளியிட்டது. ஆனால், இந்த வழிகாட்டுதலை அரசிதழில் மத்திய அரசு
வெளியிடவில்லை.
இதுபோன்ற காரணங்களால் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கோ ஏற்கெனவே இயங்கி
வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ
அனுமதி வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக யுஜிசி அறிவித்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து ஒடிசா தொழில்நுட்பக் கல்லூரிகள் சங்கம் உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச
நீதிமன்றம் 17-4-2014 அன்று
பிறப்பித்த உத்தரவில், 2014-15 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு
அனுமதி புதுப்பிப்பு, புதிய கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி வழங்குவதற்கான
அதிகாரத்தை
ஏஐசிடிஇ-யிடமே வழங்கியது. அதைத்தொடர்ந்து புதிய பொறியியல் கல்லூரிகள்
தொடங்கவும், ஏற்கெனவே இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதியை
புதுப்பிக்கவும் உரிய உத்தரவு வழங்கும் பணிகளை ஏஐசிடிஇ கடந்த ஆண்டு மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2014 டிசம்பரில் தொடரப்பட்ட
சிறப்பு விடுமுறைக்கால மேல்முறையீடு மீது உச்ச நீதிமன்றம் கடந்த 2014
டிசம்பர் 18-ஆம்
தேதி உத்தரவு ஒன்று பிற்பபித்தது.
அதில், கடந்த 17-4-2014 அன்று பிறப்பித்த உத்தரவு வருகிற 2015-16
கல்வியாண்டுக்கும் நீட்டிக்கப்படுவதாகவும், 2015-16 கல்வியாண்டிலும்
பொறியியல் கல்லூரிகள்
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் அனுமதி பெறுவதற்கு முன்னர், ஏஐசிடிஇ-இன்
அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் எனவும், அந்த உத்தரவில் தெரிவித்தது.
அதனடிப்படையில், வருகிற 2015-16 கல்வியாண்டில் புதிய பொறியியல் கல்லூரி
தொடங்குதல், புதிய பாடங்களைத் தொடங்குதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை
உயர்த்துவது, படிப்புகளைக் கைவிடுவது, மாணவர் எண்ணிக்கையைக் குறைப்பது, கல்லூரியை இழுத்து மூடுவது என அனைத்துக்குமான விண்ணப்பங்களை
இணையதளத்தில் சமர்ப்பிக்குமாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 20 கடைசித் தேதியாகும்.
சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து அனுமதிக்கான அறிவிப்பை
வெளியிடுவதற்கான
பணிகள் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு விடும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...