ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம்
என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர்
தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்தச் சான்றிதழ்களை
சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும்,
இப்போது அவர்கள் தேர்வு எழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள் மட்டும்
சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பிப்ரவரி 14
வரை தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்
இந்தச் சான்றிதழ் வழங்கப்படும்.
சென்னை உயர் நீதின்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்துள்ள சீராய்வு மனுவின்
மீது பெறப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரை
மதிப்பெண் பெற்று சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு
சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please upload 10 science Practical materials.
ReplyDeleteThanking you......