Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாரீஸ் பத்திரிகை அலுவலகம மீது துப்பாக்கிச்சூடு : 12 பேர் பலி


                           

            பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில்,வார பத்திரிகை அலுவலகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
 
        பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சார்லி ஹெப்ட்டோ என்ற வாரந்திர பத்திரிகையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் வந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர்.அக்காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உள்பட 10 பேர் பலியாகினதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என்பதும் பயங்கரவாதிகளின் தாக்குதலா என்பது குறி்த்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கு முன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று சம்பவம் நடந்ததாகவும் போலீசில் தரப்பில் கூறப்படுகிறது.சம்பவ அறிந்த பிரான்ஸ் அதிபர் தனது பாதுகாப்பு உயரதிகாரிகளின் கூட்டத்தினை கூட்டி உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.




2 Comments:

  1. பத்திரிக்கை 2011லேயே தாக்கப்பட்டது...
    அதிலிருந்து தொடர்ந்து ஒரு மதம் குறித்த விமர்சனத்துக்கும் விசனத்திற்கும் உட்படும் கார்டூன்களை தொடர்ந்து வெளியிட்டு வந்திருகின்றனர்...
    ஒரு மத தலைவர் குறித்து
    சொரண்டு சொரண்டுன்னு சொரண்டியிருக்கிரார்கள் ...
    மதவாதிகள் பண்பட்ட முறையில் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்..
    பன்னெண்டு உயிர்களை காவு வாங்கிய அந்த தருணத்தில் சாத்தான் வழிபாட்டுகாரர்களாக மாறிவிட்டனர்...
    என்னசொன்னாலும் இது கொடூரமான காட்டுமிராண்டித்தனம்.

    விசாரணையில்தான் தெரியும் உண்மைலேயே இது மத தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு யாரோ ஒருவரின் கைங்கரியமா என்பது..

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் "இறை தூதரை குறித்த கார்டூனுக்கு பதிலடி" என்று கத்தினார்கள்-
      பி பி சி (பாலிமர் நியூஸ் )...

      குண்டடி பட்டு கீழே விழுந்த நபருக்கு ,அருகே மீண்டும் ஓடி சென்று மீண்டும் சுட்ட காட்சி.. கொடூரத்தின் உச்சகட்டம்...

      சம்பந்தப்பட்ட பத்திரிகை மீதே தவறு இருந்தாலும் பாரிஸில் நீதிமன்றங்களே இல்லையா???

      "அமைதி மதம்" என கருதப்பட்டதை இன்று அந்த மதத்தை சார்ந்த சில வஞ்சக நபர்கள் கெடுத்து வருகின்றனர்.

      உலக அளவில் அம்மதம் ,அம்மதத்தினர் மீது தாக்குதல் நடத்த சராசரி மக்களை தூண்டும் செயல் இது ...

      ஆயிரம் "விஸ்வரூப கமல்ஹாசன்" வந்தாலும் பிரோஜனமில்லை ...

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive