10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள்
பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது
தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில்
(என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.
மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகியப் பாடங்களை மாணவர்கள் எந்த அளவுக்கு
புரிந்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு
நடத்தப்படுகிறது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட
பள்ளிகளில் ஆய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் இந்த ஆய்வு நடத்தும் பொறுப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச்
மாதத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த ஆய்வுக்கான மாதிரி கேள்வித்தாள்களை தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி
கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக
ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்றல் அடைவுத் திறன்
ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக 10}ஆம்
வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 10}ஆம் வகுப்பு மாணவர்களின்
கல்வித் தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல், கற்பித்தல் முறைகளில் தேவைப்பட்டால் மாறுதல்களைக் கொண்டுவரவும்
வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...