“குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, ஜனவரி
இறுதியில் வெளியாகும்,” என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 2,760
குரூப் - 2 ஏ பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்று
சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு
மற்றும் துறை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. ரேங்க் அடிப்படையில், முதல்
10 இடங்களை பிடித்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வாணைய தலைவர்
பாலசுப்ரமணியன், ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
இந்த முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு, ஜன., 23ம் தேதி வரை நடக்கும். இதில், நாள் ஒன்றிற்கு 200 பேர்
என, 2,200 பேர் அழைக்கப்படுவர். மீதமுள்ளவர்கள், இரண்டாம் கட்ட
கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். ஜன., 27ம் தேதி முதல், கிராம நிர்வாக
அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான கலந்தாய்வு நடக்கும்.
ஏற்கனவே நடந்த குரூப் - 1 தேர்வு முடிவுகள், 15
நாட்களில் வெளியாகும். ஜனவரி இறுதியில், 2015க்கான ஆண்டு திட்டம்
வெளியிடப்படும். அதே காலகட்டத்தில், குரூப் - 1 தேர்வு தேதியும்
அறிவிக்கப்படும். தற்போதுள்ள சூழலில், குரூப் - 1 தேர்வு மூலம் தேர்ந்து
எடுக்கப்படும் துணை கலெக்டர் மற்றும் காவல் துறை டி.எஸ்.பி., பணியிடங்கள்,
அதிகளவில் காலியாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...