ராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும்
செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம்,
நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர்
பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை
வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும்,
டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதியின்றி, சாலை ஓரம் உள்ள ரேஷன் கடையில் செயல்படும் இப்பள்ளியில் 4 மாணவிகள், 8 மாணவர்கள் படிக்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர் ஒருவர்
கூறுகையில், "நொச்சிவயல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த
பள்ளி வயது குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்க 3 கி.மீ., தொலைவில் உள்ள
ராமநாதபுரம் வந்து சென்றனர். அவர்களின் நலன் கருதி நடப்பு கல்வி ஆண்டில்
இப்பள்ளி துவங்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள
மற்றொரு பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது. ரூ.15 லட்சத்தில்
கழிப்பறை, சமையல் கூடம் உட்பட இரு வகுப்பறைகளுடன் கட்டடம் கட்டும் பணி
நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டடத்தில் பள்ளி செயல்படும்"
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...