Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Posting - முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரிய–ஆசிரியைக்கு பணி நியமன ஏற்பாணை வழங்க வேண்டும் - கூட்டணி

          ஆசிரியர் தகுதி தேர்வு முதன் முதலாக நடைபெற்ற 12.7.2012–க்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரிய–ஆசிரியைக்கு பணி நியமன ஏற்பாணை வழங்க வேண்டும்,

         2014–2015–ம் கல்வி ஆண்டிற்கான பணியிட நிர்ணய ஆணையை உடனே வெளியிட வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு முதன் முதலாக நடைபெற்ற 12.7.2012–க்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியஆசிரியைக்கு பணி நியமன ஏற்பாணை வழங்க வேண்டும், பணி பாதுகாப்புவழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

       குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம், முற்றுகை போராட்டங்களை நடத்தினார்கள். இன்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

          நாகர்கோவில் கார்மல் பள்ளி முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஜெரோம் தலைமை தாங்கினார். கார்மல் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் பாதிரியார் பாஸ்டின், மெலோடியஸ் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

       ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜாண் உபால்டு தொடங்கி வைத்தார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட பொறுப்பாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.

      இதேபோல் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் முன்பும் ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




1 Comments:

  1. MORE THAN 1000 BT TEACHERS APPOINTED SAME DATE ON 19-12-2011
    BUT OUR CV ON NOV 2010 AND FEB 2011 .
    ALL PRIORITY CANDIDATES ..ICM...
    .. WE DID NOT GET EXCEMPTION FROM TET AND PROBATION DECLERATION IS NOT DONE..
    BUT SAME GO NUMBER 112831 DATED 19-12-2011.....
    WHAT TO DO NEXT....
    PLS CONTACT 9962228283

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive