உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி
இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும்,
சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், உதவியாளர்,
கணினி இயக்குபவர், தட்டச்சர் ஆகிய பிரிவுகளில் 268 காலியிடங்கள்
உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கு
கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி எழுத்துத்
தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 27 ஆயிரத்து
983 பேர் எழுதினர்.
எழுத்துத்
தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திறனறிவுத் தேர்வில் 3 ஆயிரத்து 631 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து
நேர்முகத் தேர்வுக்கு 221 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்தப்
பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு
ஜனவரி 5-ஆம் தேதியும், நேர்காணல்
தேர்வு ஜனவரி 6 முதல் 8-ஆம்
தேதி வரை நடைபெறும். இது,
நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கு மட்டும் பொருந்தும்.
தட்டச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...