Important Links:
15.12.2014
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து இந்த அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தாலும், விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதிச்
சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை ஏற்பது ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற
உள்ளது.
மிக மிக நன்றி....விரைவான சேவைக்கு
ReplyDelete