ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும்
700 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஸீ50 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை
வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த உதவித்தொகை வேண்டி முனைவர்
பட்டம் பயிலும் 730 மாணவர்கள் கடந்த 2013ல் விண்ணப்பித்து இருந்தனர்.
இதைதொடர்ந்து, கடந்த 2013,14ம் கல்வியாண்டில் முனைவர் பட்டம் படிக்கும் 700
மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான உதவித்தொகைக்கு என ஸீ3.50 கோடி நிதி
ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த முனைவர் பட்டம் படிக்கும்
மாணவர்களுக்கு நான்காண்டு வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அரசாணையில் குறிப்பிட்டதுபோல் இல்லாமல், மதம் மாறிய கிறிஸ்தவ
மாணவர்கள் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே
உதவித்தொகை வழங்கப்படும் என ஆதிதிராவிட நலத்துறை உயர்அதிகாரிகள்
தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அரசாணை வெளியிட்டு 7
மாதங்களாகியும் மாணவர்களுக்கு அளிக்க ஆதிதிராவிட நலத்துறை நடவடிக்கை
எடுக்கவில்லை. இதுதொடர்பாக, மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஜூன் மாதம் முதற்கட்டமாக 560 மாணவர்களுக்கு உதவித்தொகை
வழங்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை பின்னர் வழங்கப்படும் என
ஆதிதிராவிட நலத்துறை தெரிவித்தது. இதனால், அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.70
லட்சத்தை அரசுக்கு மீண்டும் திருப்பி செலுத்தியது.
இந்நிலையில், மீதமுள்ள மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில்
தற்போது புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், கிறிஸ்தவ மதம் மாறிய
ஆதிதிராவிட மாணவர்கள் தவிர்த்து என்று குறிப்பிட்டு 112 மாணவர்களுக்கு
உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த
உதவித்தொகையை நம்பி முனைவர் பட்டம் பயிலும் கிறிஸ்தவ ஆதிதிராவிட
மாணவர்களுக்கு புதிதாக வெளியிட்ட அரசாணை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 700 மாணவர்களுக்கு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் 28
மாணவர்களுக்கு 2013,14ம் கல்வியாண்டில் உதவி தொகை வழங்காமல் வேண்டுமென்றே
ஆதிதிராவிட நலத்துறை நிறுத்தி வைப்பதாகவும் மாணவர்கள் தரப்பில்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, முனைவர் பட்டம் பயிலும்
மாணவர்கள் கூறும்போது, இப்பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட்டு
உதவித்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Pl take necessary action to get amt to students.... Amt increase pannanum... That is not enough to research students..
ReplyDelete