வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த
தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013)
தொடர்ந்தனர்.
அவ்வழக்கு நீதியரசர் சந்துரு அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 34
ஆசிரியர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை
தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு (REV.APPLW.300/2014) இன்று நீதிமன்ற
எண்.10 நீதியரசர்.சுந்தரேஷ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...