திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் தலைமையில் இனிதே நடைப்பெற்றது.
�� 2015 ம் ஆண்டு ஜனவரி 29 ம் தேதி மாலை 5 மணி
அளவில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவகம் முன்பு
மத்திய, மாநில அரசு CPS ஐ கைவிட்டு GPF ஐ தொடர வேண்டி கவனஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானிக்கபட்டது.
�� 1/7/04 முதல் 31/05/06 வரை உள்ள இடைப்பட்ட
காலத்தை பணிக்காலமாக பணப்பலனுடன் தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
�� ஆசிரியர்களுக்கு எதிராக நடைப்பெறும் வன்முறை
சம்பவங்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வன்மையாக கண்டித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
�� ஆசிரியர் - மாணவர் நல்லுறவு குறைந்து வர
காரணமான காரணிகளை களைந்திடவும் வகுப்பறை வன்முறை தொடராமல் ஆசிரியர்களூக்கு
உரிய பணி பாதுகாப்பை வழங்கிடவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
�� ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக கலந்தாய்வு நடைப்பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
�� Mphil ஊக்க ஊதியம் அரசாணை வெளியிட்டும் முறையாக வழங்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
�� அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் ஒளிவுமறைவின்றி தொடர்ந்து நடத்திட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...