'சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று, மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை குறைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இப்போதைக்கு அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. அதேபோல், தேர்வு எழுதும் தவணையும் குறைக்கப்படாது. மேலும், ஆங்கில திறனறி தேர்வுக்கான மதிப்பெண்களும் தேர்ச்சியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...