Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டிப்ஸ்

          பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது. என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும் வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது.
 
           மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி குளிர் காலமும் ஆரம்பித்துவிட்டது. சில மாணவர்கள் தேர்வு நேரங்களில் மட்டுமே விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கும் மற்ற நாளை விட தேர்வு நேரத்தில் தான், எங்கிருந்து இந்த தூக்கம் வருமோ தெரியாது. ஒரு வருட காலமாக ஆசிரியர் நடத்திய பாடங்கள் என்றாலும், சிலருக்கு பரீட்சைக்கு முதல்நாள் உட்காந்து விடிய விடிய படித்தால், தான் படித்த மாதிரி இருக்குமாம். சிலர் தேர்வு அறைக்கு செல்லும் வரை புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டும் மளமளவென படித்து ஒப்பித்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி இருப்பதனால் வீணாக மனதில் படப்படப்பு தான் ஏற்படுகிறது. முதலில் மாணவர்கள் தங்களால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்பதை நம்புங்கள். இதுவரை படித்த பாடங்களை மட்டும் ரிவைஸ் பண்ணினால் போதும்.
தேர்வு நேரத்தில் படிப்பை விட உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சத்தான உணவுகளை எடுத்து கொள்ளலாம். பசியுடன் படிக்க வேண்டாம். அதே சமயம் வயிறு முட்ட உணவுகளை உட்கொள்ளவும் கூடாது. பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எண்ணெயில் செய்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இட்லி, தோசை, காய், பழ வகைகள் சாப்பிடலாம். இப்படி கட்டுப்பாடாக உணவுகள் சாப்பிட்டாலே, மனது லேசாகிவிடும். தேர்வு எழுதும் போது உற்சாகமாக இருக்கும். சில மாணவர்களின் பெற்றோர்கள் தனது குழந்தையின் படிப்பில் அக்கறை காட்டுவது என்பது சந்தேகம் தான். அப்படி இருக்காமல் தேர்வு நேரத்தில் உங்கள் குழந்தையோடு நீங்களும் கொஞ்சம் தயாராவது நல்லது. தேர்விற்காக படித்து இருக்கும் நேரத்தில், உங்கள் வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அல்லது உறவினர்கள் வந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களை தவிர்ப்பது நல்லது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்க சொல்லிவிட்டு அவர்கள் டி.வி. பார்ப்பது அல்லது போனில் பேசிக் கொண்டு இருந்தால், மாணவர்களின் மனம் மாறி படிக்க முடியாமல் போய்விடும்.
தேர்வுக்கு முதல் நாளே பேனா, பென்சில் போன்ற பொருட்களை கவனமாக எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக தேர்வு அட்டவணையை வீட்டு சுவரில் ஒட்டி வைக்கவும். சிலர் இன்றைக்கு என்ன பரீட்சை என்பதையே மறந்து, வேறு பாடம் படித்து செல்பவர்கள் பலருண்டு. பரீட்சை நேரத்தில் மட்டும் மாணவர்கள் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. காலையில் எழுந்து ஒருமுறை படித்து பார்க்கலாம். நண்பர்கள் சொன்னார்கள், என அந்த நேரத்தில் படிக்காத ஒரு கேள்வியை படிக்க தொடங்க வேண்டாம். அந்த வேள்வி வருமோ? வராதோ என்ற குழப்பத்துடன் படிக்கும்போது, ஏற்கனவே படித்த கேள்விகள் கூட மறக்க வாய்ப்புள்ளது. தேர்வு அறைக்கு முன்னதாக செல்ல வேண்டும். தேர்வு மையத்திற்கு வந்த பிறகு சிறிது நேரம் புத்தகத்தை திருப்பி பார்க்கலாம். நீங்கள் படித்த கேள்வியையே, வேறு மாதிரி கேட்டு இருப்பார்கள். அதைப் பார்த்து பதற்றமடைய வேண்டாம். நமது புத்தகத்தில் உள்ள கேள்வியாகத்தான் இருக்கும் என நம்பிக்கையுடன் பரீட்சையை எழுத வேண்டும்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive