தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு
மாநிலத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜசேகரன் வரவேற்றார்.
சிதம்பரம் மா.கம்யூ., எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், பொதுச்செயலர்
சுப்ரமணியன், அமைப்புச் செயலர் இந்துசேனன், மாநில தலைமை நிலைய செயலர்
நல்லபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி தலைவர் வத்சலா, தஞ்சை மண்டல
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர்
பங்கேற்றனர். கூட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்
உள்ள பள்ளிகளை வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து,
கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையின்படி பி.எட்.,
படித்தவர்கள் தான் பள்ளி, விடுதிகளை ஆய்வு செய்யும் வகையில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அமைச்சர்கள், இயக்குனர்களுக்கு
நியமிக்கப்படும் செயலாளர்கள் பணிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க வேண்டும்.
கலைப் பிரிவு பாடங்களை உருவாக்கி கிராமபுற மாணவர்கள் மேம்பாடு அடைய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டில் தகுதி,
பருவம், தேர்வுநிலை, சிறப்புநிலை போன்றவைகளை சம்மந்தப்பட்ட தலைமை
ஆசிரியர்களே பதிவு செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்த
ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். நலத்துறை பள்ளிகளில்
சிறப்பாசிரியர், இளநிலை உதவியாளர்கள் பணி உருவாக்க வேண்டும். அனைத்து
பள்ளிகளுக்கும்
கழிவறை வசதிகள், இதனை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பணி மூப்பு பட்டியலை இணைய
தளத்தில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.மாவட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...