கிறிஸ்துமஸ்
பண்டிகை நாளான 25–ந்தேதியன்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும்
இந்து மகாசபா தலைவர் மதன்மோகன்
மல்வியா ஆகியோரின் பிறந்த நாள் வருவதால்
அன்றைய தினத்தை “சிறந்த ஆளுமை” தினமாக,
கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து
மத்திய அரசின் நவோதயா, கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில் சிறந்த ஆளுமை தினத்தை
கொண்டாடும் வகையில் பள்ளிக் குழந்தைகளுக்கு
பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பள்ளிகளில் கிறிஸ்துமஸ்
விடுமுறை ரத்தாகும் என தேசிய நாளிதழில்
செய்தி வெளியாகியிருந்தது.
விடுமுறை ரத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கல்வி மந்திரி ஸ்மிரிதி இரானி பத்திரிகை செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பத்திரிகை செய்தி தவறானது. கிறிஸ்துமஸ் அன்று வழக்கம் போல் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும். கட்டுரைப் போட்டிகள் மட்டும் ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...