ஆணாய் பிறந்த யாவரும் கூனிக் குறுக வேண்டிய வெட்கக்கேடான தருணம் இது. மேலை நாட்டு நீலப்படங்களும், பாலுணர்வூட்டும் தமிழ் திரைப்படங்களும் வளர்இளம் பருவத்தினர்க்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் எளிதாய் கிடைத்ததன் விளைவு இது.
மங்கையின் கர்பப்பையும் பிறப்பு உறுப்பும் - மனித வர்க்கம் புதிதாய் உற்பத்திக்கவும், பிறக்கவும் - இயற்கை வழங்கிய அற்பதங்கள்.
பிரசவ அறையில் பச்சிளம் குழந்தையை நிறைமாதக் கர்ப்பிணி பிரசவிக்க படும் அவஸ்தையை - பாலுணர்வு ஆண்குழந்தையிடம் தொடங்கும் 13 வயது முதல் நேரில் பார்க்க வைக்கப்பட வேண்டும்.
வைரமுத்து படைப்பில் பதிந்தது போல் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் மனைவியின் வலியை கணவர்கள் கண்ணால் காண வேண்டும்.
ஒரு சிறிய முள்ளை பாதத்திலிருந்து ஊசியால் அகழ்ந்தெடுக்க எவ்வளவு வலி உணர்கிறோம். வெல்ல உருண்டையளவு குழந்தையின் தலையை பிரசவிக்க பெண்ணின் பிறப்பு உறுப்பு எவ்வளவு வலி கொள்ளும்?
காவலர்கள் பெண்ணின் பிறப்பு உறுப்பு மீது எட்டி உதைக்கிறார்கள்; லத்தியை செலுத்துகிறார்கள்.
இலங்கை சிங்கள இராணுவத்தினர் ஈழத்தமிழ்ப் போராளிப் பெண்களை கூட்டாக வண்புணர்ச்சி செய்து பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு பொருத்தி வெடிக்க வைத்தார்கள்.
டெல்லி நிர்பயா பேருந்து வண்புணர்ச்சி நிகழ்வில் - பேருந்தில் கடைசியாய் நண்பணோடு நள்ளிரவு திரைப்படம் பார்த்து திரும்பிய கல்லூரி மாணவியை 4 வெறியர்கள் காட்டாயப்பாடுத்தி வண்புணர்ச்சி செய்த பின் - 5ஆவதாக 16 வயது சிறுவனால் வண்புணர்ச்சியில் ஈடுபட முடியாத இயலாமையால் - பேருந்தில் இருந்த தடிமனான இரும்பு கம்பியை பிறப்பு உறுப்பில் செலுத்தியிருக்கிறான். கம்பி பிறப்பு உறுப்பையும் கர்பப்பையையும் சிதைத்து உள்ளுறுப்புகளையும் கடுமையாக காயப்படுத்தியுள்ளது. ( நிர்பயாவின் மரணத்திற்கு காரணம் - 4 வெறியர்களின் வண்புணர்ச்சி அல்ல. 5ஆவது நபரான 16 வயது சிறுவனின் கொடூர செயல் மட்டுமே. சிகிச்சையளித்த டாக்டர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்) இருவரையும் உடைகள் ஏதுமில்லாமல் பேருந்திலிருந்து நடுஇரவில் சாலையில் கீழே
உருட்டி தள்ளிவிட்டு தப்பிவிட்டனர். உள்ளுறுப்புகள் சிதைந்து இரத்தம் வெளியேறியபடி சில மணி நேரம் கழித்து நிர்பயா மீட்கப்பட்டது எத்தணை இந்தியர்களுக்கத் தெரியும்? கம்பியால் ஒரு முழம் அளவு உள்ளுறுப்புகள் அழுகிய நிலையில் - கடைசியாக அந்தப் பேதைப் பெண் என்ன நினைத்தபடி கண்ணீர் வடித்து இறந்தாளோ நினைத்துப் பாருங்கள் ஆண்களே!
இங்கு நம் மாவட்டத்தில் நம் பள்ளியில், 10 ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுவன் தன் அருகாமை வீட்டு 11 வயது சக பள்ளிச்சிறுமியை தனியே அழைத்துப் போய் கை கால்களை கட்டி - கண்ணாடியால் மார்பு கிழித்து - பிறப்பு உறுப்பில் அப்பெண்ணின் இங்க் பேனாவைக் கொண்டு குத்தி(இதை எழுதும் போதே மனம் உதறுகிறது) கொடூரத்தின் உச்சத்தையும் கடந்து பாட்டிலில் மண்டை உடைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். என்ன அவஸ்தைபட்டிருக்கும் அந்தப் பிஞ்சு உடல்?
சினிமா அல்லவா சிறுவர்களை தவறுதலாக வழிநடத்தும் மிக ஆபத்தான முதல் திசைதிருப்பி. எளிதாய் கிடைக்கும் நீலப்படங்கள் இளம்உள்ளங்களில் மிகையான பாலுணர்வைத் தூண்டி எல்லை மீறி கொலையே புரிய வைத்துவிட்டதல்லவா?
எந்த ஆணையும் இனிப் பெண்இனம் கேவலமாய் சந்தேகக் கண் கொண்டு அல்லவா பார்க்கும்!
முருங்கைக்காயை நறுக்குவது போல் வண்புணர்ச்சியாளர்களின் ஆணுறுப்பை நறுக்குகிறது அரபுநாட்டுச் சட்டம்.
போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலை சந்திப்பில் வண்டியில் படுக்க வைக்கப்பட்ட வண்புணர்ச்சியாளர்களின் தலையை மட்டும் கீழே தொங்க விட்டு - சாலையில் மணல் பரப்பி - பளபளக்கும் நீள வாள் கொண்டு - ஒரே வெட்டாய் தலை துண்டிக்கிறது அரபுநாட்டுச் சட்டம்.
நம் நாட்டில் சட்டம் திருத்தவில்லையாயினும் -
ஆண்கள் நாம் மனம் திருந்தலாமே!
- ஆணாய்ப் பிறந்தததற்கு வெட்கப்படும்
ஆடவர்களில் ஒருவன்.
Exactly correct.we should punish by death sentence.but even in 6th girl issue local MLA helping the boy to come out due to caste politics.where are we going?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபெருமை .
Deleteநன்றி
தவறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவோமென்ற பயமில்லாத காரணம் தான் குற்றம் செய்ய தூண்டுகிறது ...
ReplyDeleteஎதிரிக்கு எதிராக ஆதாரங்கள் உடனடியாக நிரூபித்து கட்டாயம் "மரணதண்டனை" வழங்கப்பட வேண்டும் ...
ஜனநாயக நாடு என்ற யோக்கிய போர்வை அவிழ்த்து கடுமையான தண்டனை எதிரிக்கு வழங்கப்பட வேண்டும் ...
டெல்லி மருத்துவ மாணவியின் உயிர் பறித்த காமுகன் "சிறார்" என காரணம் காட்டி மிக மிக குறைந்தபட்ச தண்டனை வழங்கியது போல் அல்லாமல் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்
Exact...
ReplyDeleteThanks Raja.... for published article...
ReplyDelete