கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன்
திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி
செய்தனர்.
எனது மகன்தான் கேலி செய்ததாகக் கருதி அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மாற்றுச் சான்றிதழ் அளித்து பள்ளியைவிட்டு வெளியேற்றினர். செய்யாத தவறுக்கு மன்னிப்புக்கோரியும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரது கல்வி பாதிக்கப்படும். சான்றிதழில் நன்னடத்தை திருப்தியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் பள்ளியில் சேர்த்து தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஜெ.ஜெயக்குமாரன் ஆஜரானார்.
நீதிபதி:
பள்ளியை விட்டு பாதியில் நீக்கினால் மாணவனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும்
கடும் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் எந்த ஒரு பள்ளியிலும் கல்வியாண்டு
இடையில் அதுவும் பிளஸ் 2 மாணவனை அனுமதிக்க மாட்டார்கள். எதிர்காலம் கருதி
அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மனுதாரர் மகன் பிளஸ் 2
முழுக்கல்வியாண்டையும் பூர்த்தி செய்யும்வரை தலைமை ஆசிரியர் எவ்வித
தொந்தரவும் செய்யக்கூடாது. மாற்றுச்சான்றிதழ் வழங்கிவிட்டதால் அனுமதிக்க
முடியாது என்ற தொழில்நுட்பக் காரணங்களை கூறக்கூடாது. மாணவனிடம்
நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் வாங்கி, அனுமதிக்க வேண்டும் என்றார்.
பெசாவர் குழைந்தைகளுக்கு .....
ReplyDeleteதுப்பாக்கி எப்போது விறகாகும்
என்னென்ன கனவோட
என்னென்ன நினைவோட
எல்லாமே போச்சையா
துப்பாக்கி ரவையோட
தொட்டா போதும்
செவந்துபோகும் தோளுல
பட்டா கத்தி பட்டிருச்சே
ஐயையோ என்னாகும் ?
ஐந்துவேளை தொழுகை
அல்லாவுக்கு வேணுந்தா - உங்க
தொழுகை சத்தம் மட்டும் எங்களோட
அழுகையா கேட்கலையா ?
பொட்டு வச்சா குத்தமின்னு
சொல்லித்தா வளத்தீங்க
ரத்ததில பொட்டு வச்ச
குத்தத்த என்ன சொல்ல
வாத்தியாரு அடுச்சாலே
வாடிவிடும் புள்ளைங்க
துப்பாக்கி குண்டுதாங்க
வலுவிருக்கா சொல்லுங்க
ஈவு இரக்கமெல்லாம்
துளிகூட இல்லையா -உங்க
யுத்த களத்துக்கு
பட்டாம்பூச்சிகள் தொல்லையா ?
என்னதா இருந்தாலும்
எங்கமேல கோபமா
இப்பவாச்சும் உங்களோட
கோபந்தான் தீருமா ?
சிங்கத்தின் கோபத்துக்கு
காட்டெருமை இரையாகும்
அணில்பிள்ளைய கொள்ளுறது
எப்படிங்க முறையாகும்
பட்டுபுழு கூட்டுக்குள்ள
பாம்புவந்தா என்னாகும் - உங்க
துப்பாக்கி கட்டையெல்லாம்
எப்போது விறகாகும்
போராட்ட களமெல்லாம்
வெண்புறாக்கள் பறக்கட்டும்
இருந்தாலும் உங்கள
அன்பே உருவான
அல்லாவே கேட்கட்டும்
நண்பரே . .
Deleteஇறந்தவர்கள் மாணவர்கள் என்பதால் எனக்கும் வருத்தமே.
அனைவரும் ஒரு விஷயத்தை கவனிக்க தவறுகிறீர்கள் ... தாலிபான்கள் அதிகம் கொன்றது மூத்த மாணவர்களை மட்டுமே.. காரணம் தெரியுமா உங்களுக்கு??????
அந்த பள்ளி ராணுவத்தினரின் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளி , படிப்பை முடிக்கும் மூத்த மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து,தாலிபன்களின் இடங்களில் பணி புரிய அதிக வாய்ப்பு உண்டு.. ஆதலாலே இந்த கொலைகள் நடந்தேறியது...
1)அந்த மாணவர்களின்(பெறும்பாலான) கனவு /நினைவு இந்தியாவை இம்சிப்பது தான் ...
2)பட்டாகத்தி வளர்த்தவனுக்கு பட்டாகத்தியாலே மரணம்
3)பட்டுபுழு கூடு அல்ல பாகிஸ்தான்... பாம்பு பொந்து ... ராஜநாகம் மற்ற பாம்பை கொல்வது இயல்பே ....
4) அன்று அன்பை போதித்த இஸ்லாம் மதத்தின் மதிப்பை கெடுக்க இன்று இவர்களே (போகோஹரம், தாலிபான்,லஷ்கர் ஈ தொய்பா மற்றும் பலர் பலர் பலர் பலர் பலர் ) போதும் ...
வேற்று மதத்தினர் தேவையே இல்லை
"தலைமை ஆசிரியர் எவ்வித தொந்தரவும் செய்ய கூடாது" ...
ReplyDeleteஐயோ ஐயோ , கஷ்டம் தான்
Ivanallam padichi enna panna poraan.
ReplyDeleteThiruthatha jenmam irunthenna laabam.
ReplyDeleteஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ReplyDeleteஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன.
அதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட மனுதாரர்கள் அடங்கிய பிரிவு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.
இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டுயதுதான்.
எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Tntet soon .......
ReplyDeletemuthala.....tet pass pannunavangalukku posting kuduga ............. een management schoolukku govt thane salary kodukkuthu...... govt posting podalamme...............
ReplyDelete