Home »
» அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில்
சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி
நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி
இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில்
புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New
Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம்
படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம்,
பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட
துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா
படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள்
சேர்ந்து பயில டிச.15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் தமிழகத்தில் 88 படிப்பு
மையங்களும், 79 தகவல் மையங்களும் செயல்படுகின்றன. மேற்கண்ட மையங்களில்
விண்ணப்பம் பெற்று, அங்கேயே அனுமதி சேர்க்கை செய்யலாம் என தொலைதூரக்கல்வி
இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...