'விரைவில் அனைவரிடமும் புவிதகவல் அமைப்பு 'சாப்ட்வேர்' பயன்பாட்டில் இருக்கும்,' என காந்திகிராம பல்கலையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
காந்திகிராம பல்கலையில் புவிஅறிவியல் மையம் சார்பில் புவி தகவல் அமைப்புதின கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் நடராஜன் துவக்கி வைத்தார்.
புவிஅறிவியல் மைய இயக்குனர் குருஞானம் பேசியதாவது: 'தொழில்நுட்பத்துறையில் புதிய மைல்கல்லாக புவிதகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்.,) 'சாப்ட்வேர்' உள்ளது. இதன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பூமிபற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மொபைலிலும் இந்த 'சாப்ட்வேரை' பயன்படுத்த துவங்கிவிட்டனர். அரசு அனைத்து துறைகளிலும் இதனை பயன்படுத்த துவங்கிவிட்டது. தனியார் அமைப்புகளும் விபரங்களை இதில் பதிவு செய்து வருகின்றன. புவி தகவல் அமைப்பு மூலம் நேரம், பணம் மிச்சமாகும். எந்தவொரு பொருளையும் எளிதில் வாங்க, விற்க முடியும். நினைத்த இடத்திற்கு உடனடியாக செல்லலாம். வெகுவிரைவில் அனைவரது கையிலும் மொபைலில் இதுஇருக்கும். இதன் தாக்கம் கிராமங்களிலும் இருக்கும்,' என்றார். பேராசிரியர்கள் வாசுதேவன், ராஜேஷ்கண்ணா பயிற்சி அளித்தனர். பேராசிரியர்கள் பழனித்துரை, நேரு, விஜயகுமார், பூபாலன் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...