புதியதாக
தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு
மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும் மீண்டும் ஒரு
பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த
வேண்டும் என தமிழக ஆசிரியர்
கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்திய
செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வேண்டுகோள்
விடுத்தார்.
ஆசிரியர்கள்
பணியிட மாறுதல் கூடாது என
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கினங்க பதவி உயர்வு ஒரே
சமயத்தில் வழங்க இயலுமா என
இயக்குநர் அவர்கள் கேட்டார்கள். அவ்வாறு
நடந்தால் தமிழக அரசுக்கும் நமது
துறைக்கும் பலரின் பாராட்டுகள் கிடைக்க
வாய்ப்புண்டு. தாங்கள் பள்ளிக் கல்வித்துறை
முதன்மைச் செயலாளரை கலந்து கொண்டு ஒரு
தேதியை அறிவிக்க வேண்டும் என நேற்று தொலைப்பேசியில்
கேட்டுக்கொண்டார். உறுதியாக
வாய்பினை ஏற்படுத்தித் தருவதாக இயக்குநர் அவர்கள்
உறுதியளித்துள்ளார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...