செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம்
ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய
அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம்
ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின்
ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம்
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து
முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய
வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு
அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர்
சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள
ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
it is unfair to refuse Pay by showing strength. These teachers are basic building block of future generations
ReplyDeleteunfit for tn govt.
ReplyDelete