தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு
டிசம்பர் 24 முதல் 30 வரை மாநிலம் முழுவதும் 6 இடங்களில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலக
பரிந்துரைப் பட்டியல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து வந்த கடிதத்தின்
அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக
நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாற்றப்பட்ட தேதிகள் ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அந்த வாரியம்
தெரிவித்துள்ளது.
The above news is false ,because the honorable supreme court had stop the process and don't make any appointment to till 16th January 2015. Contempt petition 523 of 2014 dated 15.12.2014
ReplyDeleteRamesh. K
Perambalur.